வறுமைப் பெண் – எவ்லின் அண்டர்ஹில்

Illustration : Scott Bakal

நான் அவளை
உம்பிரியன் மலையில் சந்தித்தேன்.
அவளது கூந்தல் முடியப்படாமல் இருந்தது
அவளது கால்கள் எதுவும் அணியாமல் இருந்தன:
ரகசிய மகிமை நிரம்பியவளாக
அவள் தேவனோடு
தனியாக நடந்துசென்றாள்.

நான் அவளை நகர வீதியில் சந்தித்தேன்:
ஓ,
அப்போது அவளுடைய
எல்லா அம்சங்களும் மாறிவிட்டன!
கனத்த கண்களுடனும்
களைத்த கால்களுடனும்
அவள் மனிதனோடு
தனியாக நடந்துசென்றாள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x