நாங்கள் இருவரும் பிரிந்து
இன்றோடு ஐந்து வருடங்கள் ஆகிறது
ஒவ்வொரு நாளும்
இரவு என்னைக் குதறிப்போடுகிறது
உடலோ
நாளுக்கு நாள் இளைத்து
துரும்பாய்ப் போகிறது
என்றாவது ஒரு நாள்
அவளை
நேருக்கு நேர் சந்திப்பேன்
அப்போது
கொஞ்சமும் தயங்காமல்
காலில் விழுந்து கதறுவேன்,
அன்பே,
தயவு செய்து
எனக்குப் பிடித்த
அந்த பூப் போட்ட சட்டையை மட்டும்
திருப்பிக் கொடுத்துவிடு….
அது இல்லாமல் எனக்கு
தூக்கமே வரமாட்டேன் என்கிறது.




