மேம்பாலத்தின் கீழ்
ஐம்பதுக்கும் மேற்ப்பட்டோர் வசித்துவந்தனர்
அதில் ஒருவர் குடித்துவிட்டு
ராவடி செய்யவே
சட்டம் தனது லத்திகளால்
மொத்த கூட்டத்துக்குமே
சரியான பாடம் புகட்டியது.
வீரிட்டழுத அம்மணமக் குழந்தைகளை
இடுப்பில் வைத்துக்கொண்டு நடக்கிறார்கள்
முலை வற்றிய கரிய மாதாக்கள்.
அடுப்பு எரிய எரியவே
பாதி வெந்த சோற்றுச் சருவத்தை
தூக்கிக்கொண்டு
துணிமூட்டைகளை கட்டிக்கொண்டு
சிலர் அழுதபடியே கிளம்புகிறார்கள்.
அவர்கள் அணைக்க மறந்துவிட்ட
அடுப்புகளின் தீ
ஆக்ரோசமாக எரிகிறது.
பாவம் அந்த ஊமை மேம்பாலம்
வேறு வழியே இன்றி
அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.





அருமை