மண் சரிந்து
ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்
சிரமப்பட்டு
ஒருசிலரை மட்டும் மீட்டாகிவிட்டது
ஒப்பீட்டளவில்
அவர்களை அடக்கம் செய்யும் செலவைவிட
மண் சரிவைத் தடுக்க மேற்கொள்ளும் செலவே
கூடுதல் ஆகிறது.
ஆகவே
இந்த இடர்களை நிறுத்தக் கோரி
தொடர்ந்து நாங்கள்
ஹோமம் வளர்த்துகிறோம்.
⦾
கற்கக் கசடற
நான் சில குற்றங்களை
முறையாக செய்ய நினைத்தேன்
எனவே
நன்கு படித்து போலீஸ் ஆனேன்.




