அம்மா சொன்னாள்,
அதுவொன்றும் பெண்ணின் புகைப்படமல்ல.
அவர்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
அவர் நம்மைப்போன்றவர் அல்ல.
பெரிய மேதை.
அவ்வளவு நீண்ட கேசம் வைத்திருக்க
அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நீ அவரை கலாய்க்கக் கூடாது.
ஒருவேளை
நீயும் அவரைப்போல மேதாவியாகிட்டால்
நீ முடிவெட்டிக்கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.
ஆனாலும் அதற்கு
அவ்வளவு மதிப்பொன்றும் இல்லை.
என்னை நம்பு,
நீளமான கூந்தலைப் பராமரிப்பது மிகவும் சிரமம்.
அதிலுள்ள சிக்கு முடிச்சுகள் உடையவே
பலமுறை,
ரொம்ப நேரம் தலைசீவ வேண்டும்.




