அப்பா சொன்னார்,
நான் எனது கத்தியை பள்ளிக்குக் கொண்டு சென்று
மேசையில் ஒரு உருவத்தைக் கீறினேன்.
தலைமை ஆசிரியர்,
இதை சரி செய்ய
ஐந்து டாலர்கள் கொண்டுவரவில்லையென்றால்
நான் எனது படிப்பை முடிக்க முடியாது என்று எச்சரித்தார்.
எனது பெற்றோர் ஐந்து டாலர்கள் கொடுத்தனர்.
அந்த காலத்தில் அது பெரிய பணம்.
நான் நேரே வங்கிக்குச் சென்று
5 டாலர்களை 500 பென்னிஸ்களாக
மாற்றிக்கொண்டேன்.
அதை காகிதப் பைக்குள் வைத்துக்கொண்டு
தலைமை ஆசிரியரின் கதவைத் தட்டினேன்
அவரது மேசையின் மீது
மொத்த சில்லறைக் காசுகளையும் கொட்டிவிட்டு
அவரிடம் சொன்னேன்,
நான் எனது பன்றி உண்டியலை உடைத்துவிட்டேன்.
அதைக் கேட்டதும் அவர்,
“அடடா… என்ன மன்னிச்சிடுப்பா,
இந்த பணத்த நீயே வெச்சிக்கோ”
என்று சொல்வாரென்று நினைத்தேன்
ஆனால் அவர் என்னிடம்,
“சில்லறைக் காசுகளையெல்லாம் ஏற்க முடியாது,
போய் நோட்டாகக் கொண்டு வா” என்றார்
மீண்டும் வங்கிக்குச் சென்று
நோட்டாக மாற்றி வந்து கொடுத்தேன்.
அவர் சரியான கல்நெஞ்சக்காரர்.




