Art : Sarah Jarrett
அம்மா சொன்னாள்,
உன்னுடைய மன சிகிச்சையாளரிடம்
என்னை வில்லியாகக் காட்ட
நீ கூறும்
எல்லா மோசமான கதைகளையும்
நானறிவேன்.
அவர்
எப்போதாவது இந்த வீட்டுக்கு வந்தால்,
உன் அறையைப் பார்த்தால்,
சுத்தம் செய்யச் சொல்லி
தொந்திரவு செய்திருப்பார்.
ஊரிலுள்ள பிள்ளைகள்
தபால்தலைகளையும் நாணயங்களையும் சேகரித்தால்
எனக்கு வந்து வாய்த்ததோ
தூசியை சேகரிக்கிறது.
உனது சேகரிப்பை மெத்தைக்கு அடியில்
பத்திரப்படுத்தியிருந்தால்
இவ்வளவு மோசமாகியிருக்காது
ஆனால்,
நீயோ
எப்போதெல்லாம் அறையை விட்டு வெளியேறுகிறாயோ
அப்போதெல்லாம்
வீடெங்கும் சிதற விட்டுச் செல்கிறாய்.




