எனது பெற்றோர் எனக்கு
ஒரு பூதக்கண்ணாடியை பரிசளித்தனர்.
நான் எனது அறைக்குள் சென்று
கால்சராயை கீழே இறக்கிவிட்டேன்.
அந்த பூதக்கண்ணாடி
எனது ஆண்குறியை
இரு மடங்கு பெரிதாக்கியது.
எனது குறி
எனது கையைவிடவும்
கூடுதல் தடிமனாகும்வரை
அதை தள்ளிப் பிடித்தேன்.
அறை முழுவதையும் நோட்டம் விட்டேன்.
இவ்வளவு பிரம்மாண்டமான குறியை வைத்து
என்னால் எதுவும் செய்யமுடியும்
எனினும்
எதுவும் செய்யத் தோன்றவில்லை.
கால்சராயை
மேலேற்றிவிட்டுக்கொண்டு
சமையலறைக்குச் சென்றேன்.
அங்கே அம்மா கேட்டாள்,
“உனக்கு புதிய விளையாட்டுப் பொருள்
பிடித்திருக்கிறதா?”
நானவளிடம் சொன்னேன்
ஆமாம்
ஆனால்,
பூதக்கண்ணாடியை எடுத்த பிறகும்
பிரம்மாண்டமாக இருக்கவேண்டும் என்பதே
என் விருப்பம்.
அம்மா சொன்னாள்,
“எனக்கு அதுபற்றிக் கவலையில்லை.
வீடு ஏற்கனவே அலங்கோலமாக இருக்கிறது.
அது மேலும் அலங்கோலமாவதை நான் விரும்பவில்லை”




