Italy Street art
அவள் சொன்னாள்,
நீயொரு மிருகம்.
உனது பெருத்த வெள்ளைத் தொப்பையும்
அம் மயிர் நிறைந்த கால்களும்.
நீ உன் நகங்களை வெட்டுவதேயில்லை
கொழுத்த கைகள்
பூனை போன்ற கால்கள்
மிளிரும் செம் மூக்கு
அப்புறம்
நான் பார்த்ததிலேயே மிகப் பெரிய விதைகள்
நீ விந்தைப் பீய்ச்சியடிப்பது கூட
திமிங்கலம் தனது பின்புறத் துளையால்
நீரை பீய்ச்சியடிப்பதுபோல்தான் இருக்கும்.
மிருகமே மிருகமே மிருகமே,
என்றபடியே
என்னை முத்தமிட்டவள்
காலை உணவுக்கு என்ன வேண்டும் என்றாள்.




