Art by : Mitya Fenechkin
அவள் சொன்னது;
நான் வந்தது
உன்னிடம் சொல்லவே.
அது, இதுதான்.
நான் விளையாடவில்லை.
அவ்வளவுதான்,
எல்லாம் முடிந்துவிட்டது.
நான் ஷோபாவில் அமர்ந்துகொண்டு
படுக்கையறைக் கண்ணாடிக்கு முன்
அவள் சரிசெய்துகொண்டிருந்த
அவளுடைய நீளமான
செங் கூந்தலைப் பார்த்தேன்.
அவள், கூந்தலை மேலே இழுத்து
தலைக்கு மேல் குவித்துக் கொண்டாள்
அவளது கண்கள்
எனது கண்களை பார்த்தன.
பிறகவள்
கூந்தலை அப்படியே விட்டாள்,
அது சரிந்து
அவள் முகத்தின் முன்னே விழுந்தது.
நாங்கள் படுக்கைக்குச் சென்றோம்.
பேச்சுக்கிடமின்றி
நானவளை
பின்னிருந்து பற்றிக்கொண்டேன்
எனது கை
அவள் கழுத்தைச்
சுற்றிவளைத்துக்கொண்டது.
நானவளது மணிக்கட்டுகளையும்
கைகளையும் தொட்டேன்.
முழங்கைகளை மிகச் சரியாக
உணர முயன்றபோது
அவள் எழுந்துகொண்டாள்.
இதுதான்,
இதுதான் நடக்கும்.
நல்லது, நான் கிளம்புகிறேன்.
நான் எழுந்து அவளுடன் கதவுவரை நடந்தேன்.
விடைபெறும்போது அவள் சொன்னாள்,
எனக்காக நீ கொஞ்சம்
குதி செருப்புகளை வாங்கவேண்டும்.
பின்புறக் குதியானது
சன்னமானகவும் உயரமாகவும்
இருக்கக் கூடிய
கறுப்பு நிற செருப்புகள் வேண்டும்.
இல்லை,
அவை சிவப்பாக இருக்கட்டும்.
நானவளைப் பார்த்தேன்,
மரங்களின் கீழ்
சிமெண்ட் பாதையில்
இறங்கி சென்றுகொண்டிருந்தாள்.
அவள் நல்லபடியாகவே நடந்துசென்றாள்.
சூரியன்
பாய்ன்செட்யாஸைபோலச் சொட்டியது.
நான் கதவை மூடினேன்.
……………………………………………………………………………………………………………

poinsettias என்பது ஒரு வகை பூச் செடி.
(மேலே கொடுக்கப்பட்டுள்ளது)
பூவைக் கிள்ளும் போது காம்பில்
சொட்டும் பாலானது
மிகவும் விஷத் தன்மையுடையது எனக் கூறப்படுகிறது.
எனவே இவ்விசத் தன்மைக்காகவே
கவிஞர் இப் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்
எனப் புரிந்துகொள்ளலாம்.




