சதை, எலும்பை மூடியிருப்பதுபோல
சில சமயம் அவர்கள்
மனதை ஆன்மாவுக்குள் வைக்கிறார்கள்
அவன் அளவுக்கதிகமாக
குடித்துவிட்டு வரும்போது
அவள் குவளையை
சுவற்றில் போட்டுடைக்கிறாள்
அதை எவரும் கண்டுகொள்வதில்லை
ஆனால்
படுக்கைகள் உள்ளும் வெளியுமாய்
ஊர்ந்து செல்வதை
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
சதை எலும்பைப் போர்த்தியிருக்கிறது
சதை, இன்னும் அதிகமான சதையைத் தேடுகிறது
எதற்குமே வாய்ப்பில்லை
நாமெல்லோரும்
ஒற்றை விதியின் சதியில் சிக்கியிருக்கிறோம்
அதை
யாராலும் எப்போதும்
கண்டுபிடிக்கவே முடியாது
இந் நகரம்
குப்பைகளால் நிரம்பி வழிகிறது
பழைய வாகன அரைப்புக் கிடங்குகளால்
நிரம்பி வழிகிறது
பேய்வீடுகளால் நிரம்பி வழிகிறது
மருத்துவமனைகளால் நிரம்பி வழிகிறது
கல்லறைகளால் நிரம்பி வழிகிறது.
நிரப்புவதற்கு ஏதுமில்லை.




