நரகமென்பதோர் தனிமையான இடம் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

Art by : Mitya Fenechkin


அவருக்கு வயது 65.
அவரது மனைவிக்கு 66 – அல்சைமர் நோய்.

அவருக்கு வாயில் புற்றுநோய்.
கதிர்வீச்சு அறுவை சிகிச்சைகளின்போது
சேதமடைந்த தாடை எலும்புக்கு பதில்
அங்கு கம்பி வைக்கப்பட்டது

ஒரு குழந்தைக்கு மாட்டிவிடுவதுபோல
தினமும் தனது மனைவிக்கு
ரப்பர் டயப்பர் மாட்டிவிட்டார்

அவர் இருக்கும் நிலையில்
வாகனம் ஓட்டமுடியாதென்பதால்
டாக்ஸி பிடித்துக்கொண்டு
மருத்துவமனைக்குச் சென்றார்

பேச கஷ்டமாக இருந்ததால்
தான் எங்கிருந்து வருகிறேனென
எழுதிக்கொடுத்தார்.

அவருடைய கடைசி வருகையின்போது
இன்னும் ஒரு அறுவை சிகிச்சை உள்ளது
இடது கன்னத்தில் கொஞ்சமும்
நாக்கில் கொஞ்சமும்
என்று சொல்லி அனுப்பினார்கள்

அவர் வீட்டுக்கு வந்ததும்
தனது மனைவிக்கு
ரப்பர் டயப்பரை மாட்டிவிட்டார்.

டிவியைப் போட்டுவிட்டு
இரவுணவு சாப்பிட்டுக்கொண்டே
மாலைச் செய்தியைப் பார்த்தார்
பிறகு துயிலறைக்குள் சென்று
துப்பாக்கியை எடுத்து வந்து
அவளது
பொறியில் வைத்துச் சுட்டார்.
அவள்
இடதுபுறமாக
அப்படியே விழுந்தாள்
அவர், ஷோபாவின் மேல் அமர்ந்தபடி
துப்பாகியை தனது வாய்க்குள் வைத்து
குதிரையை அழுத்தி விட்டார்.

சுடுச் சத்தம்
அக்கம்பக்கத்தினரை எழுப்பவில்லை

பிறகு
எரியும் டிவி
இரவுணவைத் தின்றது

சிலர் வந்தார்கள்
தள்ளி, இடித்துக் கதவைத் திறந்து
அதைப் பார்த்தார்கள்

உடனே
போலீஸ்காரர்கள் வந்தார்கள்
சில பொருட்களைப் பார்த்து
அவர்களது அன்றாட வாழ்க்கை
எப்படி போனது என்று
தெரிந்துகொண்டார்கள்

மூடப்பட்ட சேமிப்புக் கணக்கும்
1.14 டாலர் பேலன்ஸ் இருக்கக்கூடிய
செக் புக்கும் இருந்ததன
அவர்கள் தற்கொலை என்று
முடிவு செய்தார்கள்

மூன்றே வாரத்தில்
அங்கு இரண்டு புதிய வசிப்பர்கள் வந்தார்கள்
ரோஸ் என்றழைக்கப்பட்ட அவர்
கம்ப்யூட்டர் டிசைனர்
அவருடைய மனைவி அனட்டனா
பாலே கற்றவர்

அவர்களைப் பார்க்க
மற்றுமொரு
மேல்நோக்கி நகரும் ஜோடிபோலத்தான் தெரிந்தார்கள்.

………………………………………………………………………………………………………..

குறிப்பு : பாலே என்பது ஒருவகை நடனம்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x