illustration : Cristiano Guerri
இரண்டு வாரங்களுக்கு முன்பு
நியூயார்க் நகரிலிருந்து வந்த
ஒரு 24 வயதுப் பெண்ணுடன் உறவுகொண்டேன்.
அந்த சமயத்தில்தான்
வெளியே குப்பை மறியல் நடந்தது.
ஒருநாள் இரவு
எனக்காக வந்த 34 வயதுப் பெண்
சொன்னாள்,
“எனக்கு என்னுடைய
போட்டியாளரைப் பார்க்கவேண்டுமே…”
அவள் பார்க்கவும் செய்தாள்
பிறகு,
‘ஓ.. நீ கொஞ்சம் க்யூட்டானவன்!” என்றாள்.
அதன் பின் எனக்கு
காட்டுப் பூனைகளின் கிரீச்சொலி கேட்டது
பிறாண்டல்களும்… அனத்தல்களும்…
காயம்பட்ட மிருகத்தின் முனகல்களும்…
இரத்தமும்… மூத்திரமும்…
நல்ல குடிபோதையில்
ஷார்ட்ஸோடு இருந்தேன்.
நானவர்களைப் பிரித்துவிட முயன்றபோது
கீழே விழுந்து
முட்டி கழன்றுவிட்டது.
பின்னர்,
அவர்கள் கதவு வழியாக வெளியேறி
வீதியிலிறங்கி நடந்துசென்றார்கள்.
போலீஸ்காரர்களால் நிறைந்த
போலீஸ் வேண் வந்தது.
தலைக்குமேலே
போலீஸ் ஹெலிகாப்டர் வட்டமடித்தது.
குளியலறையில் கண்ணாடி முன் நின்றபடி
பல்லிளித்தேன்.
இந்த 55 வயதுவரை
இப்படியான அற்புதம்
அதிகம் ஏற்பட்டதில்லை.
வாட்ஸ் ரியட்ஸைக் (கலவரத்தைக்)காட்டிலும்
இது நன்றாகவே இருந்தது.
அந்த 34 வயதுப்பெண் மீண்டும் வந்தாள்.
அவள் மிகுந்த கோபத்தோடு இருந்தாள்.
அவளது ஆடைகள் கிழிந்திருந்தன.
ஏனென்று அறிய 2 காவலர்கள்
அவளைப் பின்தொடர்ந்து வந்தனர்.
நான் ஷார்ட்ஸை மேலே இழுத்துவிட்டுக்கொண்டு
விளக்க முயன்றேன்.
……………………………………………………………………………………………………………………………………………………………………………
குறிப்புகள் :
*டாம் ஜோன்ஸ் – இவர் ஒரு பிரபலமான பாடகர் ஆவார். ‘எனக்கு முன் நீ ஒன்றுமேயில்லை’
என்று உணர்த்துவதற்காகவே,
மறைமுகமாக விமர்சிக்கும் தொனியில்
இத் தலைப்பை வைத்திருக்கிறார் புக்கோவ்ஸ்கி.
** குப்பை மறியல் – குப்பைகளை சாலைகள் முழுக்க வீதிகள் முழுக்கக் கொட்டி நடத்தப்படும் போராட்டம்.
***வாட்ஸ் ரியட்ஸ் – லாஸ் ஏஞ்சல்ஸ் – வாட்ஸ் பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஆப்பிரிக்க-அமெரிக்க இளைஞரான மார்க்வெட் ஃப்ரை – ஐ குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக போலீஸ் கைது செய்ய வந்தபோது உண்டான தள்ளுமுள்ளில் அந்த இளைஞரும் அவரது தாயாரும் அருகிலிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் போலீசாரால் தாக்கப்பட, சுற்றியிருந்த மக்கள் தலையிட்டு அது சண்டையாகி பிறகு ஒட்டுமொத்த மக்களும் கிளர்ந்தெழ அதுவொரு மாபெரும் கலவரமாக உருவெடுத்தது.




