எங்களால் அதை செயல்படுத்த முடியவில்லை
அவள் சொல்லி முடிப்பதற்குள் அதிர்ந்தாள்.
மெல்லுவதில் அலுப்புற்றபோது
நான் சிவிங்கத்தை வாயிலிருந்து எடுத்து
துண்டு காகிதத்தில் சுற்றி ஜேப்பில் வைத்தேன்
அவள் சொன்னாள்,
உனக்கொன்று தெரியுமா,
நான் என்ன சொல்கிறேன் என்பதைக்காட்டிலும்
நீ என்ன செய்கிறாயோஅதில்தான்
ஆர்வமாக இருக்கிறாய்.
நான் சொன்னேன்,
“சுவிங்கத்திலிருந்த சுவை போய்விட்டது.
அவள் சொன்னாள்,
நான் பேசி முடிக்கும்வரையாவது
நீ காத்திருந்திருக்கலாம்.
⦾
ஒரு நல்ல அபிப்பிராயத்தை உருவாக்குதல்
நாங்கள் வெளியே டேட்டிங் செல்வதற்கு முன்
நான் இரண்டு முறை சுயமைதுனம் செய்துவிட்டேன்,
ஆகவே, நான் பார்க்க காஜியாக தெரியமாட்டேன்.




