இளைஞனின் மரணத்தில் சாகிறேன்
இடையில் சுத்தமான விரிப்புகளோ
புனித நீரோ
புகழ்பெற்ற இறுதி வாசகமோ இல்லாமல்
மூச்சு அமைதியாக வெளியேறும் மரணம்
எனது 73வது வயதிலே
வளர்ந்த கட்டியை
வெட்டி வீசும் விடியலில்
இரவுக் கும்மாளம் முடித்து
எடுப்பான சிவப்பு நிற ஸ்போர்ட்ஸ் காரில்
வீட்டு முன் வந்திறங்கலாம்
எனது 91வது வயதிலே
வெள்ளி முடியோடு
தாதாக்களுக்கே சவால் விடும் தோரணையில்
சலூன் நாற்காலியில் அமர்ந்துகொண்டு
ஹாம்பிஸ்டட் டாமிகன்ஸை வெடித்து
தலையின் பின்புறமும் பக்கவாட்டிலும்
குறைக்கச் சொல்லலாம்.
எனது 104வது வயதிலே
தடை செய்யப்பட்ட குகையில்
என்னவள்
அவள் மகளுடன் படுத்திருக்கும்போது
என்னைக் கையும்களவுமாகப் பிடிக்கலாம்
மகனுக்கு பயந்து
என்னைச் சிச் சிறு துண்டுகளாக வெட்டி
எல்லாத் துண்டங்களையும் வீசலாம்
ஆனால்
ஒவ்வொன்றாக
இளைஞனின் மரணத்தில் சாகிறேன்
பாவம் நுனிக்காலில் இருந்தும் விலகவில்லை
மெழுகுவர்த்தி மெழுகும் தேய்ந்து போகும் மரணமும்
தேவதூதர்களால் வரையப்பட்ட திரைச்சீலைகளல்ல
‘போவதற்கு என்ன ஒரு சிறந்த வழி’ மரணம்
– Roger McGough
…………………………………………………………………………………………………………………………………………………………………………….
குறிப்பு : “hamfisted tommyguns” என்பதை தமிழ்ப்படுத்தாமல்
அப்படியே பயன்படுத்தியிருக்கிறேன். இந்த புகைப்படத்தில் காணப்படுவதுபோல்
இயந்திரக் கையையே “hamfisted tommyguns” என்று குறிப்பிடுகிறார்.






