கடற்கரையில்
மூடி வைத்த கடைகளுக்குப் பின்புறம்
காமத்தைத் திறந்து வைத்திருந்தார்கள்
ஒருவன் மட்டும் தனியே வந்து
கடலைப் பார்த்தபடி
உப்பு கூடிவிட்ட வறு கடலையை
கடமைக்குத் தின்றுகொண்டிருந்தான்
அலையோசையையும் மீறி வந்த முனகல் சத்தம்
இன்ப இறகாக
அவன் செவிக்குள் சுழன்றது.
கண்களை மூடி
அதில் மூழ்கித் திளைத்தபோது
அலையின் சத்தம் கடலின் முனகலென ஒலித்தது.
கை மெல்ல ஜிப்புக்குப் போனது
வறுகடலைகள்
அவன் மீதும் கரையிலும்
சிதறிச் சிதறி விழுந்தன
அந்த பிரமாண்ட நீலவுடல்
மங்கலாகி மறைந்தபோது
பின்புறமாக பொத்தென விழுந்தான்.
நகரும் நட்சத்திரமென
விமானம் கடந்து சென்றது.




