வலது கை நடுவிரல் நகத்தை ஒண்ட வெட்டினேன்
குளித்து முடித்த பிறகு
அவள் கைகளிலும் முகத்திலும் முலைகளிலும்
லோஷனைப் பூசினாள்
அவளது யோனியைத் தேய்க்கத் தொடங்கியபோது
படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தாள்
சிகரெட்டைப் பற்ற வைத்துவிட்டு,
“இதை விட்டுவிடாதே” என்றவள்
புகைத்தபடியே லோஷனைத் தடவினாள்
தொடர்ந்து யோனியைத் தேய்த்தேன்.
“உனக்கு ஆப்பிள் வேண்டுமா” எனக் கேட்டேன்
“நிச்சயமாக, “ஒன்றை வைத்திருக்கிறாயா” என்றாள்
நான் அவளிடம் சென்றேன்
அவள் அந்தப் பக்கமாக
புரண்டுபடுத்துக்கொண்டாள்
மழையில் நனைந்த பூவைப்போல
ஈரமாகியிருந்தாள்.
அப்புறம்
வயிற்றை புரட்டிப்போட்டாள்
அவளது மிகவும் அழகான பிருஷ்டம்
என்னை நிமிர்ந்து பார்த்தது
நான் மீண்டும் கீழே சென்று
யோனியை அடைந்தேன்
கிட்டத்தட்ட அவளும் எனது குறியை அடைந்தாள்
அவள் உருண்டு, புரண்டாள்
நான் சவாரி ஏறினேன்
எனது முகம் செங் கூந்தலின் திரளுக்குள் விழுந்தது
அது அவள் தலையிலிருந்து நிரம்பி வழிந்தது
படுத்துவிட்ட எனது லிங்கம் அற்புதத்துக்குள்
அடியெடுத்து வைத்தது.
அதன்பின் நாங்கள்
லோஷன், சிகரெட், ஆப்பிள் ஆகியவற்றைப் பற்றி
நகைச்சுவையாகப் பேசிக்கொண்டோம்.
பிறகு
நான் வெளியே சென்று
கொஞ்சம் கோழிக்கறி, இறால், ப்ரெஞ்ச் ப்ரைஸ்,
பன், உருளைக்கிழங்கு மசியல், குழம்பு,
கோல் ஸ்லாவ் ஆகியவற்றை வாங்கி வந்தேன்.
இருவரும் சாப்பிட்டோம்.
அவள் என்னிடம் சொன்னாள்
எவ்வளவு அருமையாக அவள் உணர்ந்தாளென
நான் அவளிடம் சொன்னேன்
எவ்வளவு அருமையாக நான் உணர்ந்தேனென
நாங்கள் சாப்பிட்டோம்,
சிக்கன், இறால், ப்ரெஞ்ச் ப்ரைஸ், பன், உருளைக் கிழங்கு மசியல்,
குழம்பு, கோல் ஸ்லாவ் ஆகியவற்றையும்.




