Illustration : Daniel Ryan
நானறிவேன். நானறிவேன்.
அவை
வெவ்வேறு தேவைகளாலும்,
கவலைகளாலும்
வரையறுக்கப்பட்டவை.
ஆனாலும் நானவற்றைப் பார்த்து
கற்றுக்கொள்கிறேன்
அவற்றுக்குத் தெரிந்த
கொஞ்ச நஞ்சங்களை விரும்புகிறேன்.
அவ்வளவுதான்.
அவற்றுக்கும் புகார்கள் உள்ளன
ஆனாலவை
கவலைப்படுவதில்லை
அவை ஆச்சரியமூட்டும் கம்பீரத்துடன்
நடைபோடுகின்றன
அவை மிகவும் சாதாரணமாக உறங்குவதை
மனிதர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
பூனைகளின் கண்கள்
நம்முடையவற்றைக்காட்டிலும்
மிகவும் அழகாக இருக்கின்றன
அவற்றால்
கூச்ச நாச்சமே இல்லாமல்
ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்கமுடியும்.
சோர்வாக உணரும்போது
எனது பூனைகளைப் பார்க்கிறேன்
தைரியம் திரும்பவருகிறது.
நானந்த உயிரினங்களைப் படிக்கிறேன்
அவர்களே எனது ஆசிரியர்கள்




