இன்று இரயிலில்
நானொரு மேதையைச் சந்தித்தேன்.
வயது ஒரு ஆறு இருக்கும்.
அவர் எனது பக்கத்தில் வந்தமர்ந்தார்
இரயில் கரையோரம் ஓடியது
நாங்கள் கடலிடம் வந்தோம்
அப்போது அவர்
என்னைப் பார்த்துச் சொன்னார்,
“இதுவொன்றும் அழகாக இல்லை”
இதுவே முதல்முறை
நானதைப் புரிந்துகொண்டது.




